மாணவர்களுக்கு என்பதை மறந்தார் ஏழைகளுக்கும், ரிக்‌ஷா இழுப்போருக்கும் சத்துணவு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘‘கலகல’’

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம் நடந்த அரசு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து குழந்தைகள், ஏழை எளியவர்களுக்கு, ரிக்‌ஷா இழுப்பவர்களுக்கு வழங்கி வந்தனர். இதனை தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடியும் தொடர்ந்து செய்து வருகிறார்’’ என்றார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை ஏழை- எளியவருக்கும், ரிக்‌ஷா இழுப்பவருக்கும் முன்னாள் முதல்வர்கள் வழங்கியதாக கூறியதைஎண்ணி விழாவிற்கு வந்த அதிமுகவினர் அதிருப்தியடைந்தனர்.

கோபால்பட்டியில் நேற்று நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘இப்போது தங்கம் விற்கிற விலை உங்களுக்கு தெரியும். தங்கம், தங்கம்மா, தங்கராஜ் என பெயர் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். ஏனென்றால் அந்தளவிற்கு விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னென்ன செய்ய போகிறார்கள் என்று அன்றைக்கு தெரியும்’’ என்றார்.

Related Stories: