வெள்ளக்கோவில் அருகே விவசாய நிலத்தில் அத்துமீறி உயர்மின் கோபுர பணி துவக்கம்: போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து கடந்த வாரம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர், இனி இழப்பீட்டு தொகை கொடுக்காமல் எந்த பணிகளும் தொடங்க மாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வெள்ளக்கோவில் அருகே ராகுபையன்வலசு பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க குமாரசாமி என்பவர் விவசாய நிலத்தில் பவர் கிரிட் நிறுவன பணியாளர்கள் சென்றுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காங்கயம் தாசில்தார் சிவகாமி, டி.எஸ்பி. தனராசு தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று 10க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Related Stories: