சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான தேதி விவரம் நடைபெற இருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021 புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.