உமர் அப்துல்லாவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா, குடும்பத்தினருடன் தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எந்த விளக்கமும் இல்லாமல் நாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரான எனது தந்தை பரூக் அப்துல்லா, எனது சகோதரி மற்றும் அவருடைய குழந்தைகள் உள்பட அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். வீட்டில் வேலை பார்ப்பவர்களை கூட எங்களை சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதுதான் உங்களுடைய புதிய ஜனநாயகமா? எந்த சட்டப்பிரிவின் கீழ் எங்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநகர் காவல் துறை அதிகாரிகள், ‘புல்வாமா தாக்குதல் நடந்த 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால், முக்கியப் பிரமுகர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தற்காலிகமாக வீட்டுக் காவலில் வைத்துள்ளோம்’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: