ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி: ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி.!!!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன்  கீழ் சட்டமன்றப் பேரவையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் அறிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், கடந்த 5-ம் தேதி சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி  செய்யப்படும் என்று அறிவித்தார். முதல்வர் அறிவிப்பினை செயல்படுத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடந்த 5ம் தேதி நாளிட்ட கருத்துருவில் முதல்வர் அறிவிப்பனை நிறைவேற்றும் பொருட்டு கடந்த 31ம் தேதியன்று நிலுவையில்  உள்ள 16,43,347 விவசாயிகளின் ரூ.12,110.74 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து 31ம் தேதியன்று கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் 12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு  ஆணையிடுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதி அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்திட்ட செயலாக்கம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை

விவசாயிகளுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்  ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: