ஏரிகளில் முறைகேடாக மணல் அள்ளி கோடிகளில் சம்பாதிக்கிறாங்க

செங்கல்பட்டு மலை பூங்காவைச் சேர்ந்த கோபி (டீக்கடை ஊழியர்): செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும்  கொண்டு வரவில்லை. எங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சியினர் சிலரை ஏரியாவுக்குள்ளேயே விடமாட்டோம். மாநில அரசு எங்களை போன்ற அன்றாட தொழிலாளர்கள் முன்னேற எந்த வழிவகையும் செய்யவில்லை. பணக்காரர்களுக்கே அரசு திட்டங்கள் சலுகைகள் போய் சேருகிறது. பொங்கல் பண்டிகைக்கு அரசு கொடுக்கும் ரூ.2500 மீண்டும் அரசு கஜானாவுக்கே டாஸ்மாக் மூலம் வந்து சேரும் என்று ஒரு மாநில அமைச்சரே கூறுகிறார். இதிலிருந்தே இந்த அரசின் லட்சணம் என்னவென்று தெரிகிறது.

மக்களுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களிடம் இருந்து வரி என்கிற பெயரில் கொள்ளையடிப்பதிலேயே குறியாக உள்ளனர். குடிமராமத்து திட்டத்தில் தூர்வாருகிறோம் என்கிற பெயரில் செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முறைகேடாக மணல் அள்ளி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். இவர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்பதே செங்கல்பட்டு தொகுதி மக்களின் நோக்கமாக உள்ளது.

Related Stories: