ஆறு மாவட்டங்களிலும் ஆயிரத்தை தாண்டுமா?

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 36 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 தேர்தலில் மொத்தம் 639 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

* மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 182 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலூர் - 20, கிழக்கு  - 19, சோழவந்தான்  - 14, வடக்கு  - 21, தெற்கு  - 12, மத்தி  - 19, மேற்கு  - 20, திருப்பரங்குன்றம்  - 20, திருமங்கலம் -  22, உசிலம்பட்டி - 15 வேட்பாளர்கள் களம் கண்டனர். திருமங்கலம் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

* திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் பழநி  - 23, ஒட்டன்சத்திரம் -  15, ஆத்தூர் -  19, நிலக்கோட்டை  - 14,  நத்தம் -  19, திண்டுக்கல்  - 15, வேடசந்தூர் -  15 என மொத்தம் 120 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

* தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் 80 பேர் போட்டியிட்டனர். கம்பம்  - 19, போடி  - 23, ஆண்டிபட்டி -  19, பெரியகுளம்  - 19. போடியில் அதிகம் பேர் போட்டியிட்டனர்.

* ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 தொகுதிகளில், 68 பேர் போட்டியிட்டனர். ராமநாதபுரம்  - 17, பரமக்குடி -  15, முதுகுளத்தூர் -  15, திருவாடானை  - 21.

* விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 128 பேர் போட்டியிட்டனர். ராஜபாளையம்  - 20,  திருவில்லிபுத்தூர்  - 16, சாத்தூர்  - 19, சிவகாசி -  25, விருதுநகர்  - 15, அருப்புக்கோட்டை  - 15, திருச்சுழி -  18.

* சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளில் 61 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  சிவகங்கை -  16, காரைக்குடி -  15, திருப்பத்தூர் -  18,  மானாமதுரை -  12.

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களின் 36 சட்டசபை தொகுதிகளிலும் 2016 தேர்தலில் மொத்தம் 639 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சிவகாசி தொகுதியில்தான் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது, அதிகளவில் புதிய கட்சிகளும், புதிய அமைப்புகளும் பெருகியுள்ளன. தேர்தல் குறித்த விழிப்புணர்வால், சமூக ஆர்வலர்களும் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இம்முறை தேர்தல் களத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் களமிறங்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: