சாலையை துண்டிக்க மார்ச் 31 வரை திடீர் தடை

புதுடெல்லி: புதுடெல்லி மாநகராட்சி பகுதியில் மார்ச் 31 வரை சாலைகளை துண்டிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி மாநகராட்சி பகுதியில் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், தொழில் அதிபர்கள், நாடாளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டு, நீதிபதிகள் இல்லங்கள், முக்கிய அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் வீடுகள் உள்ளன. எனவே இந்த பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடம் ஆகம். இந்த பகுதியில் மார்ச் 31 வரை சாலையை துண்டிக்க திடீர் தடை விதித்து புதுடெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவசர தேவைக்கான சாலை பழுதுபார்த்தல், பராமரிப்பு பணிகள் மட்டுமே இங்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுடெல்லி மாநகராட்சி தலைமை இன்ஜினியர் சஞ்சய் குப்தா பிறப்பித்துள்ளார்.

Related Stories: