ஆஸி. ஓபன் டென்னிஸ் ஆஷ்லி பார்தி முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் மான்டிநீரோ வீராங்கனை டன்கா கோவினிச்சுடன் நேற்று மோதிய பார்தி 6-0, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி வெறும் 44 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் சோபியா கெனின் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), முகுருசா (ஸ்பெயின்), கோகோ காப் (அமெரிக்கா), சமந்தா ஸ்டோசர் (ஆஸி.), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தனது முதல் சுற்றில் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் லஸ்லோ ஜெரியை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் சிட்சிபாஸ் (கிரீஸ்), டானில் மெட்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: