தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும்...! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நாளை முதல் 9, 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் கடந்தவாரம் முதல் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பதினொன்று மாதங்களுக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், காற்றோட்டமான இட வசதி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் பள்ளிக்கு வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில் நாளை 9, 11ஆம் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்நிலையில் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

 பிற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாடத் திட்டங்களை குறைத்துள்ளதால் பள்ளிகளை திறப்பதில் காலதாமதம் செய்ய முடியாது” என்று பேசியுள்ளார். பள்ளிக் கல்வித் துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறிய அவர், “100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளுக்கு தொடங்கப்பட்டாலும் பெற்றோர்கள் அனுமதியளித்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: