சொத்து குவிப்பு வழக்கு சிறையில் இருந்து இளவரசி விடுதலை: சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு சென்றார்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த இளவரசி, தண்டனை காலம் முடிந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சசிகலாவின் தண்டனை கடந்த மாதம் 27ம் தேதி முடிந்ததை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இதனிடையில், இதே வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த இளவரசியின் தண்டனை நேற்று முடிந்ததை தொடர்ந்து, அவரும் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் சசிகலா தங்கியுள்ள ரிசார்ட் சென்ற அவர், வரும் திங்கட்கிழமை அவருடன் சென்னை திரும்புகிறார்.

இன்னும் ஓராண்டு சிறையில் இருந்தால் 10 கோடி மிச்சம்

ெசாத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் உள்ள வி.என்.சுதாகரனின் தண்டனை காலம் கடந்தாண்டு அக்டோபரில் முடிந்து விட்டது. ஆனால், அவர் நீதிமன்றம் விதித்துள்ள ரூ.10 ேகாடியே 10 ஆயிரம் அபராத தொகை செலுத்தாமல் இருப்பதால், இன்னும் விடுதலை ஆகாமல் உள்ளார். அவருடைய குடும்பத்தினரும் அபராதத்தை செலுத்த முயற்சி செய்யவில்லை. அபராதம் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அதனால், ரூ.10 கோடியை மிச்சப்படுத்த மேலும் ஓராண்டு சிறையில் இருக்கலாம் என சுதாகரன் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சசிகலா உடைமை ஒப்படைப்பு

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்ைசயில் இருந்ததால், விடுதலை நாளில் சிறைக்கு செல்லாமல், மருத்துவமனையில் இருந்து சசிகலா விடுதலையானார். இந்நிலையில், சிறையில் அவர் பயன்படுத்திய அவரது உடைமைகளை இளவரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் எழுதி கொடுத்திருந்தார். அதன்படி, சசிகலாவின் உடைமைகளை இளவரசியிடம் சிறை அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.

Related Stories: