ரேசன், அங்கன்வாடியில் கலெக்டர் திடீர் ஆய்வு

சேலம், மார்ச் 13:வாழப்பாடி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கலெக்டர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சந்திரபிள்ளை வலசை பகுதியில் செயல்பட்டு வரும் பால் குளிரூட்டும் மையத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு கொள்முதல் செய்யப்படும் பால் கொள்ளளவு,  பணியாளர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சந்திரபிள்ளை வலசை ரேசன் கடைக்கு சென்று, எடை இயந்திரம் சரியாக இயங்குகிறதா, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு,  குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். சந்திரபிள்ளை வலசு ஊராட்சியில் ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, கூட்டாத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, உயிர்காக்கும் மருந்துகள், விஷமுறிவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்திட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்….

The post ரேசன், அங்கன்வாடியில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: