.3.76 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு

இடைப்பாடி, டிச.23: இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ.3.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில், நடந்து முடிந்த திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ரூ.3.76 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும், சுமார் ரூ.1.65 கோடி மதிப்புள்ள முடிவற்ற திட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. தொகுதி மக்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளது,’ என்றார். இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், கரட்டூர் மணி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், கந்தசாமி, ரேவதி சரவணன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: