கெங்கவல்லி, டிச. 22: சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஆத்தூர்- சென்னை பிரதான சாலையில் காமராஜர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்னால், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், முன்னாள் சென்ற சொகுசு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் எதிர் திசையில் திரும்பி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். அருகில் இருந்த புதிய டூவீலர் மீது மோதியதில், டூவீலரில் வந்த வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக அரசு பஸ் டிரைவரை, பொதுமக்கள் மற்றும் கார் உரிமையாளர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
