சபாநாயகர் தனபால் அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடக்கும்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: 3ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். இதை தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் நிபுணர் டாக்டர் வி.சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்படும். 4ம் தேதி (நாளை) காலை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும். 5ம் தேதி (வெள்ளி) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அன்றைய தினம் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். ஏனைய அரசியல் அலுவல்கள் இருந்தாலும் எடுத்துக்கொள்ளப்படும். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: