வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

 

சென்னை, மே 20: நுங்கம்பாக்கம் வீராசாமி தெருவில் விஷால் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் ஆட்டோ ஒன்றில், 15 வயது சிறுவனுடன் வந்த பெண், செயின் வாங்க வந்துள்ளோம், மாடல் காட்டுங்கள் என்று கடையின் உரிமையாளர் விஷாலிடம் கூறினார். அதன்படி விஷால் 6 செயின்களை ஒரு பெட்டியில் வைத்து காட்டியுள்ளார். அப்போது தனக்கு தண்ணீர் வேண்டும் என்று செயின் வாங்க வந்த பெண் கேட்டார்.

உடனே விஷால் தண்ணீர் கொண்டு வருவதற்குள் 6 செயினில் ஒரு ெசயினை எடுத்து கழுத்தில் மாட்டி கொண்டு, ஏற்கனவே கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பெட்டியில் வைத்துவிட்டார். பிறகு தண்ணீர் குடித்துவிட்டு, மாடல் சரியில்லை என்று கூறி சிறுவனுடன் பெண் ஆட்டோவில் சென்றுவிட்டார். பின்னர் கடையின் உரிமையாளர் 6 செயின்களை பரிசோதனை செய்த போது, அதில் ஒரு செயின் கவரிங் செயின் என தெரியவந்தது.

உடனே சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 15 வயது சிறுவனுடன் வந்த பெண் செயினை திருடி சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஷால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கடையில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் ஆட்டோவின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பழைய குற்றவாளி சுபத்திர கல்யாணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுபத்திர கல்யாணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: