ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், மின்சார பணியாளர், கம்பியாள் மற்றும் பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளில் அடுத்த மாதம் 7ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.

பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். அத்துடன் விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும். பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும் சேர்க்கை சம்பந்தமாக சந்தேகம் இருப்பின், முதல்வர், ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், எண்.55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 021. தொலைபேசி எண். 044-25911187, கைபேசி எண்- 9962452989, 9094370262 என்ற முகவரியில் நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: