புதிய செஸ் இல்லை:மிக முக்கியமாக, வரி சிதைக்கப்படவில்லை..சூப்பர் பட்ஜெட் என அமிதாப் காந்த் கருத்து.!!!

டெல்லி: மத்திய பட்ஜெட்டை சூப்பர் பட்ஜெட் என்று என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021-2022-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வித்தியாசமாக டிஜிட்டல் முறையில் Union Budget என்ற மொபைல் செயலி மூலம் இன்று நாடாளுமன்றத்தில தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அதிகளவு சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுகள் குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், 70 வயதைக் கடந்த பென்ஷன் பெறும்  முதியவர்கள் வருமானவரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8-வது பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், சூப்பர் பட்ஜெட். இது COVID க்கு முந்தைய கால மீட்பு கட்டத்தில் எங்களை விரைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் 3-4 வருடங்களுக்கு ஒரு திசையையும் வழங்கும்.

இந்த நேரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சொத்து பணமாக்குதலில் அரசு கவனம் செலுத்துகிறது. நீண்டகாலமாக பிரைவேட் துறையை ஈடுபடுத்துவது அவசியம் என்ற அரசாங்கத்தின் சிந்தனையை காட்டுகிறது. இது மிகவும் நடைமுறை, பகுத்தறிவு மற்றும் முற்போக்கான பட்ஜெட். மிக முக்கியமாக, வரி சிதைக்கப்படவில்லை மற்றும் புதிய செஸ் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: