டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு, இமாச்சலில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இதுவரை இல்லாத அளவில் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுதியது. அனல் தகித்ததன் காரணமாக அனைவரும் ஏ.சி.யை ஓடவிட்டதால் டெல்லியில் மின்சாரத்தின் தேவை 8,302 மெ.வாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வெயிலில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தினசரி 12 – 3 மணி வரை கட்டாயம் ஓய்வு வழங்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: