வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

டெல்லி : வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். வட இந்திய மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வெயிலின் உச்சத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், வெயிலில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தினசரி 12 -3 மணி வரை கட்டாயம் வழங்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறையும் வரை இந்த 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் தேங்காய் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்திற்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார். வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக புதிய நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் தலைமை செயலாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாது பயணிகளின் தாகத்தை போக்கும் வகையில், பேருந்து நிழற்கூடங்களில் மண் பானைகளில் தண்ணீர் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாசுபாட்டை குறைக்கும் வகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (STPs) இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை டேங்கர்கள் மூலம் சாலைகளில் தெளிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

The post வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: