தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் : குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அதிரடி!!

டெல்லி : டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தண்ணீர் வீணாவதை தடுக்க நீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு குழுக்களை அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், டெல்லியில் கடுமையான வெப்பச் சலனம் நிலவுகிறது மற்றும் ஹரியானா அரசு டெல்லிக்கு தரவேண்டிய தண்ணீரை விடுவிக்காததால் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், தண்ணீரை சேமிப்பது மிகவும் முக்கியமானது. இருப்பினும், டெல்லியின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் வீணாவது காணமுடிகிறது. கட்டுமானத் தளங்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் சட்டவிரோத இணைப்புகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகின்றன.

எனவே, தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்படி,தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்ணீர் குழாய்கள் மூலம் வாகனங்களை கழுவுதல், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வீணடிப்பது, கட்டுமான அல்லது வணிக நோக்கங்களுக்காக நீர் விநியோகத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும். இக்குழுக்கள் நாளை காலை (30.05.2024) காலை 8 மணி முதல் பணியில் ஈடுபடுத்தப்படும், மேலும் தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் : குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அதிரடி!! appeared first on Dinakaran.

Related Stories: