தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு அரிய வாய்ப்பு!: நடப்பு நிதியாண்டுக்கான தங்கப்பத்திர விற்பனை இன்று தொடங்குகிறது...ஆர்.பி.ஐ. அறிவிப்பு..!!

சென்னை: நடப்பு 2020 - 2021ம் நிதியாண்டுக்கான 11 வது கட்ட தங்கப்பத்திர விற்பனை இன்று தொடங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. அதன்படி இந்த நிதியாண்டுக்கான தங்கப்பத்திர விற்பனை இன்று முதல் வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. தங்கபத்திரம் விற்பனையின் போது கிராம் ஒன்று ரூ. 4,912 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கபத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கி ரூ. 4,862 ஆக்க விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆதனால் தங்க பத்திரம் வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தள்ளுபடி நிச்சயம் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கபத்திரங்களை தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்க முடியும். வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் மூலமாக தங்கபத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

இது முதலீடுகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. எனினும் தங்கத்தினை நகையாக, தங்க கட்டிகளாக வாங்கி வைக்கும்போது, அதற்கு செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ள நிலையில், அது வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தங்க பத்திரத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

Related Stories: