ஒரே ஒருமுறை மட்டும் அதிமுக ஜெயித்த தர்மபுரி குறிவைக்கும் கூட்டணி கட்சிகள்

ஒரே ஒரு முறை மட்டும் அதிமுக வெற்றி பெற்ற தர்மபுரி தொகுதியானது நடப்பு சட்டமன்றத் தேர்தலிலும் அதன் கூட்டணிகள் குறிவைக்கும் தொகுதியாக மாறியுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் வெற்றி பெற்றார். இதனால் நடக்க உள்ள தேர்தலிலும் தர்மபுரி தொகுதியை தேமுதிக கேட்டு அடம் பிடித்து வருகிறது. இது ஒரு புறமிருக்க, விஜயகாந்தால் தலையில் குட்டப்பட்டு பரபரப்புக்கு ஆளான பாஸ்கர், தற்போது பாஜகவில் உள்ளார். எனவே அவருக்காக சீட்டு கேட்டு பாஜகவும் கோதாவில் இறங்கியுள்ளது.

இது எல்லாம் சாத்தியப்படாத விஷயம். தர்மபுரி என்றாலே பாமகவின் கோட்டை. எந்த நிலையில் இந்த தொகுதியை எங்களுக்குத்தான் ஒதுக்கணும் என்று முரண்டு பிடிக்கிறதாம் பாமக. இதையெல்லாம் ஏத்துக்க முடியாது. ஆளும் கட்சியான அதிமுக ஒவ்வொரு முறையும் தர்மபுரி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வருகிறது. 1980ல் ஒரே ஒரு முறை மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட அரங்கநாதன் வெற்றி பெற்றார். இப்படியே போனால் தர்மபுரியில் அதிமுகவே இல்லை என்று சொல்லிவிடுவார்கள். எனவே இந்த முறை, நம்ம கட்சிக்கு தான் தர்மபுரி தொகுதியை ஒதுக்கணும் என்று போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சிட்டாங்களாம் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.

Related Stories: