வீட்டுக்கே நேரில் சென்று சசிகலாவை பார்ப்பேன்: கருணாஸ் எம்எல்ஏ பேட்டி

கமுதி:  சென்னையிலிருந்து கடந்த 24ம் தேதி 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தெய்வீக யாத்திரையை திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் துவக்கினார். நேற்று அவர், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் யாத்திரையை முடித்துக் கொண்டார்.  பின்னர் அவர் கூறுகையில், ‘‘மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ரத யாத்திரை சென்றேன். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என இரு பிரிவாக செயல்பட்டனர். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் 2 சீட்டுக்கள் கேட்டிருக்கிறோம்.  எங்களை மதித்து பேச்சுக்கு அழைப்பவர்களுடன் கூட்டணிக்கு செல்வோம். சென்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு சீட்டு கொடுத்தது ஜெயலலிதாதான். அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்ததும் நேரில் வீட்டிற்கு சென்று சந்திப்பேன்’’ என்றார்.

Related Stories: