திருப்பாற்கடல் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், எல்லையம்மன் கோயில் திருப்பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், பணிகள் முடிவுற்ற நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் காலை கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து, மாலை யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை  நடந்தது.

இதையடுத்து, நேற்று காலை 2ம் கால யாக பூஜைகள், விஷேச திரவ்ய ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, விநாயகர், முருகர்,  ஐயப்பன் உள்ளிட்ட கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் உற்சவர் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை நடந்தது.

இதில், ராணிப்பேட்டை எம்எல்ஏ. ஆர்.காந்தி, மற்றும் முன்னாள் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை ஊர் பொதுமக்கள் சார்பில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்து,  சுமங்கலிகள் சார்பில் 108 சீர்வரிசைகள் ஊர்வலமாக கொண்டு வந்து எல்லையம்மனுக்கு வழங்கினர்.

Related Stories:

>