பாபநாசம் அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு

பாபநாசம்: பாபநாசம் அருகே குண்டும் குழியுமான சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஏற்கனவே பழுதான இச்சாலை சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மேலும் குண்டும், குழியுமாகி பல்லாங்குழி சாலையானது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உள்பட சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த ஜன 17ம் தேதி வெளியானது. செய்தி எதிரொலியாக கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் ஆங்காங்கே பேட்ச் ஒர்க் மட்டுமே நடைபெறுகிறது. பேட்ச் ஒர்க் செய்வதைவிட குண்டும் குழியுமான சாலை, கும்பகோணம் அடுத்து தாராசுரம் தொடங்கி தஞ்சாவூர் அடுத்த பள்ளியக்கிரகாரம் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து சாலையை தாமாக போட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>