டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க வேண்டும்: கோஹ்லிக்கு பிஷன் சிங்பேடி அறிவுறுத்தல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி கூறியிருப்பதாவது: ஆஸி. தொடரின் போது ரகானேவை நான் கூர்ந்து கவனித்தேன். எந்தவொரு கேப்டனுக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், பந்துவீச்சாளர்களை கையாளும் திறன் தான், அதில் தான் ரகானே சிறப்பாக செயல்பட்டுள்ளார். கேப்டனின் பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் பீல்டிங் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு 3 டெஸ்ட்கள் போதுமான நேரம்.

கடுமையாக முயற்சித்தும் என்னைப் போன்ற கடும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு வாய்ப்பை கூட ரகானே வழங்கவில்லை. ரகானேவிடம் 50% அதிர்ஷ்டமும், 50% திறனும் உள்ளது. எனவே கோஹ்லி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோஹ்லி முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>