பாஜ பிரமுகர் மீது தாக்குதல் அதிமுக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை சேர்ந்த ஜெகதீசன், கடந்த டிசம்பர் 31ம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் சேப்பாக்கம் பகுதி பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவராக  உள்ளேன். எனது கட்டிடத்தில் சேப்பாக்கம் பகுதி அதிமுக 114வது வட்ட செயலாளர் சிவா வாடகைக்கு உள்ளார். இவர், தனது கட்சிக்காரர்களுடன் எனது வீட்டின் முன்பு கூட்டமாக அடிக்கடி நிற்பது வழக்கமாக வைத்துள்ளார். இதனால், எங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று வர இடையூறாக உள்ளது. இதுகுறித்து கேட்தால் சிவா தனது ஆதரவாளர் ஜெயராமன் மூலம் ஆட்களை வைத்து, என்னையும்,எனது மகனையும் பலமாக தாக்கினார். எனவே  ஜெயராமன் மற்றும் அவரது ஆட்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரித்தனர்.  அதில் ஜெயராமன் தனது ஆட்களுடன் ஜெகதீசன் மற்றும் அவரது மகனை தாக்கியது தெரியவந்தது. இதனால், ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>