குற்றவாளியை தேடும் போலீஸ் சொத்துக்காக தம்பி மகன் கொலை

பெலகாவி: பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா ஹோரகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா செங்கன்னவர். இவருடைய உடன்பிறந்த சகோதரர் வீரேஷ் செங்கன்னவர். இவர்கள் இருவருடனும் சேர்த்து மொத்தம் நான்கு சகோதரர்கள். இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 20 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை பங்கிடுவதில் ஈரப்பா மற்றும் வீரேஷ் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஈரப்பா தன் தம்பி குடும்பத்தினர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது வீட்டின் அருகே தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீரேஷின் மகனை அழைத்து சென்று கோடாரியால் வெட்டினார். இதில் சிறுவன் கூச்சலிட அருகேயிருந்தவர்கள் ஒடி வருவதற்குள் சிறுவனின் கழுத்தில் கோடாரியால் வெட்டி விட்டு ஈரப்பா தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து வீரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>