பிற பல்கலை கழகங்களுடனான கல்வி ஒத்துழைப்புக்காக ‘வித்யா விஸ்டார்’ திட்டம்: டியு பொறுப்பு துணைவேந்தர் பி சி ஜோஷி பேட்டி; ஆறு மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: நாட்டின் பிற பல்கலை கழகங்களுடன் கல்வி ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதத்தில் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் ‘வித்யா விஸ்டார்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக பல்கலையின் ஆக்டிங் துணைவேந்தர் பி சி ஜோஷி தெரிவித்தார். டெல்லி பல்கலையின் ஆக்டிங் துணைவேந்தர் பொறுப்பை கவனித்து வருபர் பி சி ஜோஷி. இவர் டியு பல்கலையின் கட்நத ஆறு மாத செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டை நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளுக்கும், கல்லூரிகளுக்கும் இடையே மட்டுமின்றி பிற இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதத்தில் வி2 என்கிற \\”வித்யா விஸ்டார்  திட்டம் \\” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வி2 முன்முயற்சியின் மூலம், கல்வி ஒத்துழைப்பு, நூலகம் மற்றும் பிற கல்வி வசதிகளை கிடைக்கச் செய்ய டியூ முன்மொழிந்துள்ளது.இதற்கான கடிதங்களும் அனைத்து கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை யார்மீதும் நாங்கள் திணிக்க விரும்பவில்லை. விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைன், ஆப்லைன் வழி கற்பித்தல், பயிற்சி வகுப்புகள், கூட்டிணைந்த ஆராய்ச்சி மற்றும் பதிக்க கூட்டு போன்றவைகளையும் மேற்கொள்ள உள்ளோம். எனவே, இதில் பங்குபெற உள்ள கல்லூரிகள் குறித்த விவரங்களை இனிமேல் தான் டெல்லி பல்கலை ஆய்ந்தறியும்.

இதுதவிர, டெல்லி பல்கலை கழகம், சர்வதேச அளவில் வெளியிடப்படும் தரவரிசையில் தற்போது 510 வது இடத்தில் உள்ளது. இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி 400-500 இடங்களுக்குள் வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்லி பல்கலை வரும் 2022ம் ஆண்டு நூற்றாண்டை கொண்டாட உள்ளது. இதையொட்டி, நூற்றாண்டுக்கான என்சைக்ளோபீடியா தகவல் களஞ்சியத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக கமிட்டி ஒன்றையும அமைத்துள்ளேன். இந்த கமிட்டி அதில் கவனம் செலுத்தும். இவ்வாறு கூறினார். டெல்லி பல்கலை கழகத்தின் யோகேஷ் தியாகி மருத்துவ விடுப்பில் சென்றதையடுத்து, ஜோஷி ஆக்டிங் துணைவேந்தராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் நிர்வாக குளறுபடிகள் குறித்த குற்றச்சாட்டில் தியாகி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க கடந்த ஆண்டு அக்டோபரின் பிற்பகுதியில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பல்கலையின் கடந்த ஆறு மாத செயல்பாடுகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரம்:

* தேசிய கல்வி கொள்கை 2020 ஐ அமல்படுத்துவதற்காக பேராசிரியர் விவேக் சுனேஜா தலைமையில் 42 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

* முதல்முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஓப்பன் புக் தேர்வுகளை டியு நடத்தியது. இதில், சுமார் 2.5 லட்சம் மாணவர்களும், கடந்த ஆண்டு டிசம்பரில் 1.7 லட்சம் மாணவர்களும் தேர்வெழுதினர்.

* மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டத இதுவே முதல்முறையாகும்.

* டெல்லி பல்கலை 19,821 மாணவர்களுக்கு டிஜிட்டல் பட்டங்களையும், 3,885 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்களையும் வழங்கியது.

* வரும் ”பிப்ரவரி 27 அன்று கூட்டு பட்டமளிப்பு விழா(ஆன்லைன் மற்றும் ஆப்லைன்) நடைபெற உள்ளது.

* கடந்த ஆறு மாதங்களில், இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுடனும், உலகெங்கிலும் உள்ள 18 பல்கலைக்கழகங்களுடனும், கல்வி ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டியூ கையெழுத்திட்டது,

Related Stories: