நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மழைநீர், சகதியில் மிதக்கும் தற்காலிக காய்கனிச்சந்தை

நெல்லை: நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கனி சந்தையில் மழைநீர் மற்றும் சகதி தொடர்ந்து சூழ்ந்துள்ளதால் காய்கனிகளை ஏற்றி இறக்க வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். நெல்ைல மாவட்டத்தில் கடந்த இருவாரங்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. நெல்லை மாநகரிலும் இடைவிடாது அடித்து நொறுக்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ெநல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் டவுன் போஸ் மார்க்கட் இடிக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்த காய்கனி கடைகள் பொருட்காட்சி மைதானம், சாப்டர் பள்ளி மைதானம், டவுன் ஆர்ச் அரசு கல்வி அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால் நடக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்காட்சி மைதானத்தில் 86 கடைகள் உள்ளன. இந்தப்பகுதிக்கு செல்லும் பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை ஓய்ந்து 2 தினங்கள் ஆன நிலையிலும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் காய்கறி மூடைகளை கொண்டு செல்பவர்கள் தவறி விழும் நிலை உள்ளது. பெரிய வாகனங்கள் சகதியில் சிக்கி சரிகின்றன. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் இன்று தங்கள் கடைகளை சாலைப்பகுதியில் அமைத்தனர்.

சில வியாபாரிகள் சேறு சகதிக்கு பயந்து கடைகளை திறக்கவில்லை. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலையை சீரமைக்கவேண்டும் என காய்கறி வியாபாரிகள் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: