பறவை காய்ச்சலால் டெல்லியின் பிரபல உணவகங்களின் ஓட்டல் ‘மெனு’வில் 20 வகையான கோழி உணவுகள் ‘மிஸ்சிங்’: வகை வகையாக ருசித்து சாப்பிட்டவர்களுக்கு ஏமாற்றம்

புதுடெல்லி: பறவை காய்ச்சலால் ஏற்பட்ட தாக்கத்தால் டெல்லியின் பிரபல உணவகங்களின் ஓட்டல் ‘மெனு’வில் 20 வகையான கோழி உணவுகள் கிடைக்கவில்லை. அதனால், வகை வகையாக ருசித்து சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட தாக்ககத்தின் காரணமாக முட்டை விலை மற்றும் கறிக்கோழி விலை வெகுவாக சரிந்துள்ளது. விலை சரிவை கண்டாலும் கூட பறவைக் காய்ச்சல் பீதியால் கோழி, வாத்து, காடை போன்ற பறவை உணவுகளை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல உணவகங்களின் மெனுவிலிருந்து கோழி உணவுகள் சப்ளை செய்வதில்லை. சிக்கன் கறி, சிக்கன் கோர்மா, சிக்கன் ஜஹாங்கிரி, முர்க் முசல்லம் மற்றும் வெண்ணெய் சிக்கன், மலாய் டிக்கா போன்ற உணவுகள் ஓட்டல்களில் இல்லை என்றே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தொற்று பரவுவதை தடுக்க காசிப்பூர் இறைச்சி சந்தை மூடப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு கோழியை இறக்குமதி செய்ய டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, உணவகத்தின் மெனுவில் கோழி உணவுகள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. கோழி உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்களுக்கு மட்டன் மற்றும் மீன் உணவுகள் சப்ளை செய்யப்படுகிறது. பழைய டெல்லியைச் சேர்ந்த ஜமா மஸ்ஜித்தை ஒட்டியுள்ள மத்தியா மஹால் மற்றும் தரியகஞ்ச் பகுதி சிக்கன் ஐட்டங்களின் கடைகள் பிரபலமானது. தற்போது இடைகள் மூடப்பட்டுள்ளன.இதுகுறித்து தர்யா கஞ்சில் உள்ள புகழ்பெற்ற ஜைகா உணவகத்தின் உரிமையாளர் டேனிஷ் இக்பால் கூறுகையில், ‘எங்கள் உணவகத்திற்கு சாப்பிட வருவோரில் ‘மலாய் டிக்கா’ வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால், தற்போது கோழி கிடைக்காததால் அவர்களுக்கு தயாரித்து தரமுடியவில்லை. விருப்பமின்றி ஆட்டிறைச்சி மற்றும் மீனுடன் கூடிய சைவ உணவுகளை வாடிக்கையாளர்கள் சாப்பிடுகின்றனர்.

சிக்கன் கறி, சிக்கன் கோர்மா, சிக்கன் ஜஹாங்கிரி மற்றும் சிக்கன் முசல்லம், சிக்கன் மஞ்சூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கோழி உணவுகளை தயாரித்து வழங்குவோம். தற்போது அவற்றை தயாரித்து வழங்க முடியவில்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முழுமையாக கோழி உணவுகளே டெல்லியில் இருக்காது. சிலர் கறிக்கோழியை கிலோ ரூ .170க்கு விற்கின்றனர். இப்போது அதன் விலை ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. அதுவும் கூட தற்போது கிடைக்கவில்லை. மட்டன் மற்றும் மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ .20 முதல் 50 வரை அதிகரித்துள்ளது. நிலைமை எப்போது சீரடையும் என்பது தெரியவில்லை’ என்றார்.

Related Stories: