அகமதாபாத்: குஜராத்தின் முன்னாள் முதல்வரான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. காங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான மாதவ் சிங் ேசாலங்கி, முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று காலையில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்தார்.