தூத்துக்குடியில் ரூ.5-க்கு விற்கப்படும் அன்னாசிப் பழம்.: கேரளாவில் இருந்து டன் கணக்கில் இறக்குமதி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.5-க்கு விற்கப்படும் அன்னாசிப் பழத்தை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி சென்றனர். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள கடை ஒன்றில் கேரளாவில் இருந்து டன் கணக்கில் அன்னாசிப் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் தற்போது அன்னாசிப் பழம் சீசன் என்பதால் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் ரூ.5- முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு அன்னாசிப் பழம் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக அன்னாசிப் பழம் ரூ.50- முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை அன்னாசிப் பழம் விற்பனையாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அன்னாசிப் பழம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மிக குறைந்த விலைக்கு கிடைப்பதால் பழத்தை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Related Stories: