பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மலையாள வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் பகுதியில் மலையாள வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக ருசி மிகுந்த வெல்லம் திருவில்லிபுத்தூர் பகுதியில்  தயாரிக்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொங்கல் பண்டிகை காலங்களில் கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர். தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருவில்லிபுத்தூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஒன்று மண்டை வெல்லம். மற்றொன்று மலையாள வெல்லம் என்று அழைக்கப்படும் உருட்டு வெல்லம். மண்டை வெல்லத்தை விட அதிகமாக உருட்டு வெள்ளம் தயாரிக்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories: