உலகம் முழுவதும் சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில் பன்றி கொழுப்பில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டதா?.. உலக சுகாதார நிறுவனத்துக்கு பரபரப்பு கடிதம்

மும்பை: தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் பல சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில், பன்றி கொழுப்பில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. கொரோனா தடுப்பூசிகளில் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைப்புகள் கூறி வருகின்றனர். இஸ்லாம் மதத்தில் ஹலால் முறை என்பது அந்த மதத்தைச் சார்ந்தவர் எவற்றையெல்லாம் பின்பற்றலாம் என்பது குறித்தும், ஹராம் என்பது அந்த மதத்தவர் எவற்றையெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்தும் குறிப்பிடுகிறது.

ேமலும், இஸ்லாமிய மதப்படி பன்றி, நாய், பூனை, குரங்கு போன்ற விலங்குகள் ஹராம் முறையின்கீழ் வருகிறது. பொதுவாக தடுப்பூசிகளை நீண்டநாட்கள் இருக்கும்படி பதப்படுத்த அவற்றில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால், கொரோனா தடுப்பூசியும் பன்றி கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? என்று இஸ்லாம் மத பழைமைவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான ‘சினோவேக்’  தடுப்பூசியில் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து,

அங்கிருந்து தடுப்பூசிகள் வாங்கவுள்ள இந்தோனேஷியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அமைப்புகள், அதற்கு கடுமையான எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து, மும்பையில் செயல்படும் ‘ராஸா’ அகாடமியின் பொது  செயலாளர் சயத் நூரி, உலக சுகாதார நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இஸ்லாம் மதத்தில் தடைசெய்யப்பட்டவைகளில் ஒன்று  பன்றி. பன்றிக் கொழுப்பு ஜெலட்டின் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை  முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே, கொரோனா தடுப்பூசி பன்றி கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்டதா? குறிப்பாக சீனா போன்ற நாடுகளில், பன்றிகள் மற்றும் மாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன.

எனவே, உலகெங்கும் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளின் விரிவான பட்டியலை வெளியிட வேண்டும். இந்தியாவை பொருத்தமட்டில் பாரத் பயோடெக், சீரம் நிறுவனம், ஜைடஸ் காடிலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யவுள்ளன. எனவே, அந்த உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் தயாரிப்பு தடுப்பூசி விபரங்களையாவது வெளியிட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: