வருமான வரி ரிட்டன் குறித்த போலி எஸ்எம்எஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: வருமான வரித்தொகையை திரும்ப பெறுவது தொடர்பாக போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பைத்  தொடர்ந்து கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் வங்கி கணக்குக்கு ரிட்டன் தொகை அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரித்தொகையை திரும்ப பெறுவது தொடர்பாக  போலி எஸ்எம்எஸ் வருவதாகவும் ஊழியர்கள் எச்சரிக்யைாக இருக்கும்படியும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “தற்போது போலி தகவல்களுடன் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வருகின்றது. அந்த செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அதில் உள்ள இணைப்புக்களுக்கு சென்று விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டாம். வருமான வரி செலுத்துவோரின் விரிவான தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சல் மூலமாக ஒருபோதும் கோருவதில்லை.

வரி செலுத்துவோரின் பின்நம்பர், பாஸ்வேர்டு அல்லது பிற நிதி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்காது. இதுபோன்ற மின்னஞ்சலை பெற்றால் webmanager@incometax.gov மற்றும் incident@cert-in.org.in என்ற மெயில் ஐடியில் புகார் செய்யலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: