தெலுங்கானாவில் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை.: பாதுகாப்புக்கு சென்ற காவல் ஆய்வாளர் மீது தீப்பற்றியதால் பரபரப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் என்.நங்கம்மா மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் பணிக்கு பாதுகாப்புக்கு சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்.நங்கம்மா மாநகராட்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பூனம், சாந்தி தேவி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர்.

அவர்களது பாதுகாப்புக்காக ஜாகவர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் ராவ் தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகளில் இருந்து புகை வருவதை கண்டு காவலர் ஒருவருடன் ஆய்வாளர் உள்ளே சென்றுள்ளார். அப்போது தீடியென ஆய்வாளர் மீது தீ பற்றிய நிலையில் கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வாளருடன் சென்ற காவலர் லேசான காயங்களுடன் தப்பித்து விட 50% தீக்காயங்களுடன் ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: