ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம்: மத்திய அரசு

டெல்லி: 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுகிறது என்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் தொடங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கை நடக்க உள்ளது.

தடுப்பூசி பல்வேறு இடங்களுக்கு எப்படி கொண்டு செல்லப்படும். அதாவது விமான நிலையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்கள், ,மாவட்டங்களிருந்து கிராமங்கள், அங்கிருந்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்படும். அதன்பிறகு எப்படி மக்களுக்கு எந்த தேதியிலே, எந்த நேரத்திலே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்பதை தெரிவித்து அவர்களை அங்கே அழைத்து கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்பது சரியான முறையிலே நடக்க வேண்டும். இதற்கு எந்தவித குழப்பமும் இதிலே இருக்கக்கூடாது என்பதற்காக தான் அரசு இந்த ஒத்திகையை நடத்துகிறது.

2021 வருடத்திலே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசி நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதற்கான ஒத்திகைகளை நடத்த வேண்டும் என்பதற்காக தான் அரசு தற்போது நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் இணையதளம் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்தின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் மாநிலம் வாரியாக பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் எந்தெந்த இடத்திலிருந்து எங்கெல்லாம் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்ல வேண்டும். எங்கெல்லாம் மக்களுக்கு எந்த முன்னுரிமை அடிப்படையில் அளிக்க வேண்டும் என்பதற்கான பட்டியல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடுவது இருக்காது. ஏனெனில் தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. தடுப்பூசிகளுக்கு தேவையான ஒப்புதல்கள் கிடைத்தவுடன், தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிடும். லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான மயிற்சிகள் நிறைவடைந்துள்ள.

Related Stories: