திருமாவளவன் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் :கி.வீரமணி உரை

சென்னை : பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற  விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் திருமாவளவனுக்கு வழங்கினர்.

பேராசிரியர் கி.வீரமணி பேச்சு:

பெரியார் உடலால் தான் மறைந்தார் ஆனால் கொள்கையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரது கொள்கைகளை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.திராவிடர் கழகத்தின் உடன்பிறப்பாக தொல்.திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்.இன்றைய அரசியலில் அகில இந்திய அளவில் திரும்பி பார்க்க வைக்கும் தலைவர் தொல்.திருமாவளவன்.மனு பிரச்சினையில் எதிரிகளை எதிர்த்து களத்தில் உறுதியாய் நின்றார் காரணம் அவர் பயின்ற இடம். பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை திருமாவளவன்.

அரசியலில் திசை திருப்பலாம் என்று எத்தகைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தாலும் அது திருமாவளவனிடம் எடுபடாது. அவரது சமூகப் பணியை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதிற்காக நாங்கள் பெருமை படுகிறோம். திருமாவளவன் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் அவரது பங்கு மிகமுக்கியமான ஒன்றாக இருக்கும்.சமூக நீதியை நிலைநாட்ட ஒவ்வொருவர் வீட்டிலும் அம்பேத்கர் பெரியார் படங்கள் இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும், என்றார்.

Related Stories: