சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் : மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!!

சென்னை : பெரியாரின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி, பெண் விடுதலை, திராவிடர் விடுதலை என சமூகத்திற்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதன் கொள்கைகளை உரக்க கூறி வந்தவர். மூட நம்பிக்கை குறித்த தனது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லி வந்த பெரியார் அதை மக்களிடமும் புகட்டி வந்தார். பெரியார் தனது 94 வது வயதில் வேலூரில் காலமானார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் 47-ஆவது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை - அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்ட செய்தியின் விவரம் வருமாறு:

சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47-ஆவது நினைவு நாள் இன்று!

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்!

அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!, எனத் தெரிவித்தார்.

Related Stories: