இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் திடீர் திருமணம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்த்ர சாஹல். 30 வயதான இவர் இந்திய அணிக்காக இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் ஆடி 92 விக்கெட்டும், 45 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டும் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார். ஹரியானாவைச் சேர்ந்த சாஹலுக்கும், மும்பையைச் சேர்ந்த நடன இயக்குனரும், யூடியூபருமான தனஸ்ரீ வர்மாவுக்கும் (24) நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் சாஹல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இருவரின் திருமணம் நேற்று குருகிராமில் நடைபெற்றது. சாஹல் திருமணம் குறித்து எதுவும் தகவல் தெரியாமல் இருந்து வந்த நிலையில், திடீரென சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோர் தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படங்களை ஒரே கேப்ஷனுடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய கையோடு திருமணத்தை முடித்துள்ளார். சாஹல் ஜோடிக்கு பிசிசிஐ, ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம்வாழ்த்துதெரிவித்துள்ளது. மேலும் தவான், ரெய்னா, வாசிம் ஜாபர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: