வெளிமாநில தொழிலாளியை சுட்டுக் கொன்றார் முதலாளி

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு அருகே சக்கும்பள்ளம் பகுதியில்  ஏலக்காய் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தோட்டத்தின் உரிமையாளர்  உள்பட 3 பேர் சேர்ந்து அங்கு பணிபுரிந்த  வெளிமாநில தொழிலாளியை  துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி னர். இது தொடர்பாக தோட்ட மேற்பார்வையாளரை பிடித்து விசாரித்து  வருகின்றனர். தலைமறைவான உரிமையாளரை தேடுகின்றனர்.தோட்டத்தில் தினமும்  ஏலக்காய் திருட்டு போனதாகவும், இதனால் தாங்கள் இரவில் காவல்  இருந்ததாகவும், அப்போது ஏலக்காய் திருட வந்த நபரை துப்பாக்கியால்   சுட்டதாகவும் தோட்ட மேற்பார்வையாளர் போலீசில் தெரிவித்துள்ளார்.  கொல்லப்பட்டவரின் பெயர், விபரம் தெரியவில்ைல. வேட்டையாடும்போது கொலை நடந்ததா என்ற   கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: