397 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு வானில் வியாழன்-சனி கோள்கள் அருகருகே வந்தன: பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்

சென்னை: வான் வெளியில் கடந்த 1623ம் ஆண்டில் வியாழன்-சனி கோள்கள் அருகருகில் வந்தது. அதே போன்ற நிகழ்வு 397 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஏற்பட்டது. அதை தமிழகம் முழுவதும் பலர் கண்டு களித்தனர். வான் வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் பூமிக்கு அருகில் நம் கண்களால் பார்க்க முடிந்த கோள்களில் முக்கியமானவை வியாழன். தொலைவில் உள்ள சனி கோள்கள் வான் மண்டலத்தில் தங்களின் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது ஒரே நேர்க்கோட்டில் வருவது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அப்படி 1623 வருடங்களுக்கு முன்பு அவை சுற்றுப்பாதையில் வரும் போது ஒரே நேர்க்கோட்டில் வந்தன. ஆனால் அந்த நிகழ்வை பூமியில் இருக்கும் நாம் பார்க்கும் போது இரண்டு கோள்களும் அருகருகே இருப்பது போலதோன்றும்.

சுமார் 397 வருடங்களுக்கு பிறகு அந்த அரிய நிகழ்வு நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் இந்த இரண்டு கோள்களையும் நாம் சுமார் 1 மணிநேரம் பார்க்க முடிந்தது. இது குறித்து வானியல் ஆய்வாளர்கள் மற்றும் கோளரங்க அதிகாரிகள் கூறும் போது, சூரிய மண்டலத்தின் மிகப் பெரும் கோள்களான வியாழன் மற்றும் சனி 1623 ஆண்டுகளுக்கு முன்பு அருகேருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரண்டு கோள்களும் மிக நெருக்கமாக வருகின்ற நிகழ்வு நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் நிகழ்ந்தது. அப்போது இரண்டு கோள்களும் சிறிய நட்சத்திரங்களாக வானில் தோற்றம் அளித்தன. இது கோள்களின் மிகப் பெரிய இணைப்பு என்று தெரிவித்தனர். நேற்று மாலை வானில் தோன்றிய இந்த நிகழ்வை காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Related Stories: