ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் ஒரு வாரத்திற்கு உற்பத்தி நிறுத்தம்.: ரேயான் நூல் விலை உயர்வுக்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு

ஈரோடு: ரேயான் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் ஒரு வார காலமாக உற்பத்தி நிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் மற்றும் சித்தோடு சுற்றுவட்டாரங்களில் 30 ஆயிரம் விசைத்தறியாளர்கள்  ரேயான் நூலை கொண்டு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூல் விலை கிலோ ரூ.150-யில் இருந்து ரூ.176-ஆக உயர்ந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விசைத்தறியாளர்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.

வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நூல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவதாக விசைத்தறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிக விலைக்கு நுழை வாங்கி உற்பத்தி செய்து முடித்தவுடன், நூலின் விலை திடீரென குறைந்து விடுவதால் துணிகளை அதிக விலைக்கு வாங்க வியாபாரிகள் மறுப்பதாக விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நூல் விலை உயர்வால் லட்ச கணக்கில் இழப்பை சந்திக்கும் விசைத்தறியாளர்கள், நூல் விலையை கட்டுப்படுத்தி மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: