டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகள், சீன ஆதரவாளர்கள் நிதியுதவி : குஜராத் துணை முதல்வர் பேச்சு

அகமதாபாத் :விவசாயிகள் போராட்டத்திற்கு தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகள், இடதுசாரிகள், சீன ஆதரவாளர்கள், காலிஸ்தான் தீவிரவாதிகள் நிதியுதவி செய்வதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இன்று 23ம் நாளாக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய கிட்டதிட்ட 20 விவசாயிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து பஞ்சமஹால் மாவட்டத்தில் மோர்வா ஹடாஃப் பகுதியில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் பேசியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அவர் பேசியதாவது, தலைநகர் டெல்லியை தவிர பிற மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறவில்லை. 130 கோடி கொண்ட மக்கள் தொகையில் வெறும் 50,000 பேர் மட்டுமே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடி வருகின்றனர்.

50,000 பேரின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டுமானால் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அர்த்தம் என்ன ?. ஒட்டுமொத்த விவசாயிகளில் ஒரு சதவீதத்தினர் கூட போராட்டத்தில் ஈடுபடவில்லை. பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுப்பதற்கே இத்தகைய போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன.  டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகள், இடதுசாரிகள், சீன ஆதரவாளர்கள், காலிஸ்தான் தீவிரவாதிகள் நிதியுதவி செய்கின்றனர், என்றார்.

Related Stories: