மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை உயர்த்த வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கடும் போராட்டத்திற்கு பிறகு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை தமிழக அரசு இந்தாண்டே ஒதுக்கி மருத்துவம் படிக்க வழி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை கருத்தில் கொண்டு, 51 மாணவர்களின் மருத்துவப் படிப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான எண்ணிக்கையை 250ஆக உயர்த்த தமிழக அரசு முன் வர வேண்டும்.

Related Stories: