அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: நளின்குமார் கட்டீல் தகவல்

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் சரியான முடிவெடுப்பார் என்று பாஜ மாநில தலைவர் நளீன்குமார் கட்டீல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேலவை கூட்ட தொடரில் நடைபெற்ற சம்பவம் குறித்து பா.ஜ., மாநில அரசு சட்ட ரீதியாக போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி சட்டம்  போராட்டம் நடத்தப்படும். ஆட்சியிலிருந்தால் ஊழல் செய்வது, ஆட்சியில் இல்லை என்றால் குழப்பத்தை ஏற்படுத்துவது காங்கிரசின் செயல். டிச.20-ம் தேதி பெங்களூருவில் பா.ஜ. நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ. மாநில பொறுப்பாளர் அருண்சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து முதல்வர் எடியூரப்பா, கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சரியான நேரத்தில் முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.  

Related Stories: