சரக்கு அடிப்பதில் சிக்கிம் பெண்கள் கில்லி: மத்திய அரசு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவிலேயே சிக்கிம் பெண்கள்தான் அதிகளவில் மது அருந்துவதாக மத்திய குடும்ப நல சுகாதார ஆய்வுவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய  சுகாதார துறையின் சார்பில் நேற்று முன்தினம், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2019-2020) என்ற  ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், நாட்டில் ஆண்கள், பெண்கள் மது அருந்துவது பற்றிய புள்ளி விவரமும் இடம் பெற்றுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

*   மதுபானங்கள் தாராளமாக புழங்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை விட, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பீகாரில்தான் அதிகளவில் ஆண்கள் மது  அருந்துகிறார்கள்.

*   பீகாரில் மதுபானம் தயாரிப்பது, இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வதற்கு  அரசு தடை விதித்துள்ளது. எனினும், இங்குள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் மது  அருந்துகிறார்கள்.

*  நாட்டிலேயே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும், குஜராத் மாநிலத்திலும்தான் மது அருந்துபவர்கள் குறைவாக உள்ளனர்.

*   நாட்டில் பெண்களிடம் மது அருந்தும் கலாசாரம் படிப்படியாக அதிகமாகி வருகிறது.

*  அதிக எண்ணிக்கையில் மது குடிப்பதில் சிக்கிம் பெண்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். இங்கு, 16.2  சதவீத பெண்கள் மது அருந்கின்றனர்.

*  அசாமில் 7.3 சதவீதம், தெலங்கானா, கோவா,  மணிப்பூரில் முறையே 6.7, 5.5 மற்றும் 0.9 சதவீதம் பெண்கள் மது குடிக்கின்றனர். குறிப்பாக, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களே மது அருந்துகி–்ன்றனர்.

*  பெரும்பாலான மாநிலங்களில் நகர்புற  பெண்களை காட்டிலும், கிராமப்புற பெண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர்.

மாநில அளவில் அதிகளவில் மது குடிக்கும் ஆண்கள், பெண்களின் விவரம்

மாநிலம்    ஆண்    பெண்

தெலங்கானா    43.3%    6.7 %

சிக்கிம்                      39.8%    16.2%

மணிப்பூர்                      37.5%    0.9%

கோவா                      36.9%    5.5%

அதிகமாக மது வாங்கி தராததால் புதுமாப்பிள்ளை குத்திக்கொலை

உ.பி. மாநிலம், பாலிமுகிம்புர் கிராமத்தை சேர்ந்த பப்லு (28) என்பவருக்கு இருதினங்களுக்கு முன் திருமணம்  நடந்தது. பின்னர், அவர் திருமணத்துக்கு வந்த தனது  நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, ஏற்கனவே இவர் வாங்கி கொடுத்த மதுவை குடித்து போதையில் இருந்த நண்பர்கள், மேலும் மது வாங்கி தரும்படி வற்புறுத்தினர். ஆனால், பப்லு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராம்கிலாடி என்பவர், திடீரென பப்லுவை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த பப்லு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இது ராம்கிலாடியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: