டெல்லி விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட வெள்ளைப்புலி நிர்பயா பிரசவத்தின் போது உயிரிழப்பு: ஈன்ற இரண்டு குட்டிகளில் ஒன்று பலி

புதுடெல்லி: டெல்லி விலங்கியல் பூங்காவில் பிரசவத்தால் அவதியுற்ற ஒரு வெள்ளை புலி மற்றும்  அது ஈன்ற ஒரு குட்டி பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி விலங்கியல் பூங்காவில் நிர்பயா என்கிற அந்த வெள்ளைப்புலி பூங்காவில் ரொம்பவே பிரபலம். இந்த நிர்பயா நேற்று பூங்காவில் இரண்டு குட்டிகளை ஈன்றது. அதன்பின் அடுத்தகுட்டிகளை பிரசவிக்க முயற்சித்தபோது ஏற்பட்ட சிக்கலால் துடித்தது. எனினும், தொடர்ந்து குட்டிகளை பிரசவிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்ததாக டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே கூறினார்.  இதுபற்றி பாண்டே கூறியதாவது: பிரசவ சிக்கலால் வெள்ளைப்புலி துடித்தது. 24மணிநேரத்திற்கு பின் பிர்சனை அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழு மற்ற விலங்கியல் பூங்காக்கள் மற்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பரேலியின் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளைப்புலியை காப்பாற்ற முயன்றனர்.

இதையடுத்து, சனிக்கிழமை மாலை புலிக்கு மூன்று மணி நேர சி பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, நிர்பயாவின் கருப்பை சிதைந்து குட்டியின் சடலம் பெரிட்டோனியல் குழியில் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வெள்ளைப்புலியின் உடலில் டாக்ஸீமியா (நச்சுக்களால் இரத்த விஷம்) காரணமாக  கடுமையான தொற்றுநோய் ஏற்பட்டது.  நிர்பயா இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 24 மணிநேரம் வரை ஒத்துழைப்பு அளித்தது. எனினும், அதன்பின்னர் கடுமையான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலை 1.34 மணியளவில் உயிரிழந்தது. அதனுடன் குட்டி ஒன்றும் இறந்தது. மீதமுள்ளவை கால்நடை மருத்துவமனையில் ஒரு பிரத்யோக குழுவினரால் வளர்க்கப்படுகின்றன.

Related Stories: